மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பள்ளி வளாகத்திலேயே வைத்து செருப்படி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோரோரி பகுதியில் செயல்பட்டு வரும் ஜில்லா பரிஷத் பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஆட்டோவில் மாணவிகளை அழைத்து வரும் டிரைவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இவ்வாறாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு அனுப்பிவிட்டு பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த ஆட்டோ டிரைவர் இழுத்துச்சென்று பள்ளிக்கூட வளாகத்தில் வைத்து சரமாரி அடித்து உதைத்தனர். மாணவியின் தாய் செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதன்பிறகு ஆட்டோ டிரைவரை காவல் நிலையத்திற்கு தரதரவென இழுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ஆட்டோ டிரைவர் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவை பார்க்க;- சிக்கிய வீடியோ காட்சி... பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர்..!