சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன் ( 24). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் இருந்து வருகிறது. 

சென்னையில் பிரபல ரவுடி மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன் ( 24). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் இருந்து வருகிறது. நேற்று இரவு வெங்கட்ராமன் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சமைக்க எவ்வளவு நேரம்? ஆத்திரத்தில் தாயை கம்பியால் அடித்து கொன்ற 17 வயது மகன்!இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

இதனையடுத்து அந்த கும்பல் வெங்கடராமனை கொலை செய்ய முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன் உயிர் பயத்தில் தலைத்தெறிக்க ஓடினார். ஆனால், அந்த அவரை விடாமல் ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவுடி வெங்கட்ராமன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.