Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் பயங்கரம்.. தலைக்கேறிய போதை.. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய நண்பர்..!

சாதாரணமாக நண்பர்களுக்கு இடையே பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதமாக மாறியது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து கைகலப்பாக மாறியிருக்கிறது. ரமேஷுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அவரின் நண்பர் முருகானந்தம், திடீரென அருகில் இருந்த இரும்புக்கம்பியால் ரமேஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

birthday party...youth murder in tirunelveli
Author
Tirunelveli, First Published Oct 28, 2021, 10:40 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிறந்தநாளை கொண்டாட்டத்தின் போது பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் மகன் ரமேஷ் (32). ரமேஷ் பெயின்டிங் வேலை செய்துவந்தார். ரமேஷுக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்குப் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க;- அடுத்து வசமாக சிக்கப்போகும் பெண் முன்னாள் அமைச்சர்.. வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டும் போலீஸ்..!

birthday party...youth murder in tirunelveli

இந்நிலையில், ரமேஷுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து, தனது நண்பர்களுக்கு விருந்துவைத்திருக்கிறார். அப்போது, டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்ததால், அனைவரும் திசையன்விளை டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு நவ்வலடி சாலையில் தனியார் வங்கி அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம்.. ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்.!

birthday party...youth murder in tirunelveli

அப்போது, சாதாரணமாக நண்பர்களுக்கு இடையே பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதமாக மாறியது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து கைகலப்பாக மாறியிருக்கிறது. ரமேஷுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அவரின் நண்பர் முருகானந்தம், திடீரென அருகில் இருந்த இரும்புக்கம்பியால் ரமேஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

இதனை கண்ட சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தெறித்து ஓடினர். பின்னர், அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே  ரமேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

birthday party...youth murder in tirunelveli

இதையும் படிங்க;- நினைக்கும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி உல்லாசம்.. மருமகனுடன் சேர்ந்து மகளைத போட்டுத்தள்ளிய தாய்..!

இதனையடுத்து, ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ரமேஷை அவரது நண்பர் முருகானந்தம் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- ஆளுநரை பார்த்து அஞ்சு நடுங்க ஸ்டாலின் ஒன்னும் எடப்பாடியார் இல்லை.. பீட்டர் அல்போன்ஸ் அதிரடி சரவெடி..!

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையான ரமேஷ், கைதாகியிருக்கும் முருகானந்தம் ஆகியோர் மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.ஆகையால், இந்த விவகாரம் சாதிய மோதலாக மாறிடாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தனது பிறந்த நாளில் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios