ஆபீஸ் தோழனுடன் மது அருந்திய இளம்பெண்ணை அந்த இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.  

ஆபீஸ் தோழனுடன் மது அருந்திய இளம்பெண்ணை அந்த இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்த பாடில்லை,இந்த வரிசையில் அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய இளைஞனால் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தார்.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் பெண் பேராசிரியை.. இன்ஸ்டாகிராமில் சர்ச்சை படம் - கொதித்தெழுந்த மாணவர்கள் !

முன்னதாக அந்த நபர் தன்னுடன் கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார். அந்தப் பெண் தயக்கத்துடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது இருவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் பாரில் அமர்ந்து மது அருந்தினர், அந்த பெண் தனக்கு மது வேண்டாம் என பலமுறை கூறினார், ஆனால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தான். பின்னர் அந்தப் பெண் மது அருந்த ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி மது குடித்ததால் அந்த பெண் தன்னிலை மறந்து மயங்கினார், இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞன் ஹோட்டல் அறைக்குள் அழைத்துச் சென்று இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்தார், விடிவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து மாயமானார். பின்னர் காலையில் எழுந்து தன் ஆடைகள் கலைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தான் அந்த இளைஞனால் கற்பழிக்கப்பட்டிருப்பதை உணர்தார். தனக்கு நேர்ந்த கொடுமை எண்ணி எண்ணி கதறி அழுதார்.

சில நாட்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது குடும்பத்தாரிடம் குமுறி அழுதார், பின்னர் குடும்பத்தாருடன் சேர்ந்து காவல்துறைக்கு புகார் கொடுத்தார், போலீசார் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன், அந்தப் பெண் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.