படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

தாயுடன் சேர்ந்து, கள்ளக்காதலன் இரண்டு சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mother and paramour gave liquor to two girls and sexually harassed them at Cuddalore

கடலூர் மாவட்டம், பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பெண். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 2 மகள்கள் உள்ளனர். அதாவது பிளஸ்-1 படிக்கும் மகளும், 8 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கின்றனர். தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக புதுச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

Mother and paramour gave liquor to two girls and sexually harassed them at Cuddalore

புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. மேலும் மதுவை ஒயின் என்று கூறி 2 சிறுமிகளுக்கும் அவர்கள் ஊற்றிக்கொடுத்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

இதற்கிடையில் அந்த பெண் சமையல் வேலைக்கு செல்லும் இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளர். இதை பயன்படுத்திய முகமது இஸ்மாயில் கடந்த 4 மாதமாக மது கொடுத்து அந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அந்த சிறுமிகள் தனது தாயிடம் கூறியுள்ளனர். இதை கேட்ட அவர்களது தாய், இதுபற்றி வெளியில் சொன்னால் நான் இறந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

Mother and paramour gave liquor to two girls and sexually harassed them at Cuddalore

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் முகமது இஸ்மாயில், சிறுமிகளின் தாய் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios