தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை காட்டி பாலியல் கொடுமை..! இசையமைப்பாளர் மீது பெண் புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி கானா பாடல் இசையமைப்பாளர் பாலியல் தொந்தரவு செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

A woman has lodged a complaint with the Chennai Police against a musician for sexually harassing her by showing a pornographic video

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 28வயது பெண் ஒருவர்  வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு செல்லும் போது கானா பாடல் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.  இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சபேஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதன் பிறகு சபேஷ் தன் மீது சந்தேகப்பட்டு தினம் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததால் சபேஷை பிரிந்து  தனியாக வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!

A woman has lodged a complaint with the Chennai Police against a musician for sexually harassing her by showing a pornographic video

வீடியோவை காட்டி மிரட்டல்

சபேஷை பிரிந்து சென்றதால் தன்னுடன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக அவரது தந்தை செல்வகுமாரிடம் புகார் தெரிவித்த போதும் மகனுக்கு உடந்தையாக செல்வகுமார் செயல்பட்டு, தன்னை மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்.

உஷார்.. எப்படி எப்படியெல்லாம் ஆசை தூண்டுறாங்க பாருங்க.. 2 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ. 8 லட்சத்தை இழந்த இளம்பெண்..

A woman has lodged a complaint with the Chennai Police against a musician for sexually harassing her by showing a pornographic video

பாட்டு பாடி மிரட்டல்

மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் தன்னுடைய ஆபாசமான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் சபேஷ் சாலமன் இசையமைப்பாளர் என்பதால் கானா பாட்டு பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் யூடியூபரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சபேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஓட்டல் அறையில் நடிகை பலாத்காரம்.. நடிகருக்கு ஆண்மை பரிசோதனை.. போலீஸ் அதிரடி.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios