உஷார்.. எப்படி எப்படியெல்லாம் ஆசை தூண்டுறாங்க பாருங்க.. 2 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ. 8 லட்சத்தை இழந்த இளம்பெண்..

இதனை கீதா முழுமையாக நம்பினார். அடுத்த ஒரு சில தினங்களில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் கீதாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். லண்டனிலிருந்து தங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால்  ரூ.8 லட்சம் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். 

young Woman loses Rs. 8 lakh through online fake marriage information center

லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய இளம்பெண் ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். சாப்ட்வேர் என்ஜினீராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது புரொபைலில் பெங்களூர் முகவரியில் ஒரு இளைஞரை பார்த்தார். பின்னர் அந்த இளைஞரும் கீதாவும் ஒருவரையொருவர் சுய அறிமுகம் செய்துகொண்டு சாட்டிங் செய்து வந்தனர். தற்போது தாம் வெளிநாட்டில் இருப்பதாகவும் தன்னிடம் நகை மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை இந்திய மதிப்பில் ரூ.2 கோடி அளவுக்கு இருக்கிறது. அதனை பார்சலில் உனது பெயருக்கு அனுப்பி வைக்கிறேன். அதனை வாங்கி வைத்துக் கொள். இரண்டு மாதங்களில் தான் இந்தியா திரும்பி விடுவேன். பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்து தமிழ்நாட்டில் செட்டில் ஆகலாம் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!

young Woman loses Rs. 8 lakh through online fake marriage information center

இதனை கீதா முழுமையாக நம்பினார். அடுத்த ஒரு சில தினங்களில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் கீதாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். லண்டனிலிருந்து தங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால்  ரூ.8 லட்சம் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய கீதா, உடனடியாக அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை அனுப்பினார். அடுத்த விநாடியில் அனைத்து செல்போன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் செல்போனில் பேசிய அந்த பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை. மேலும் வெளிநாட்டு கரன்சியும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க;- "உன்னை விட உன் தங்கை செமையா இருக்கா".. மச்சினியுடனான உல்லாசத்தை கண்டித்த மனைவி படுகொலை.!

young Woman loses Rs. 8 lakh through online fake marriage information center

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதா, உடனடியாக இதுகுறித்து திருச்சி புறநகர் சைபர் கிரைம்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கீதா அனுப்பிய ரூ.8 லட்சம் பணம் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. மேலும், சாப்ட்வேர் என்ஜினீயரிடம் மோசடி செய்த நபர் நைஜீரியாவை சேர்ந்த வாலிபர் என்பதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க;- மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்.. காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios