"உன்னை விட உன் தங்கை செமையா இருக்கா".. மச்சினியுடனான உல்லாசத்தை கண்டித்த மனைவி படுகொலை.!
ஸ்வேதாவின் தங்கையுடன் சவுடேஸ் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும். அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
கொழுந்தியாள் உடனான கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை இறுக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுடேஸ். இவரது மனைவி ஸ்வேதா(30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மதுபான விடுதியில் காசாளராக சவுடேஸ் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சவுடேஸ், ஸ்வேதாவை அடித்து உதைத்து தாக்கியதுடன், துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்வேதா உயிரிழந்துவிட்டதாக கூறி அவர் நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாதக போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து ஸ்வேதா உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சவுடேசை கைது செய்தனர். அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. ஸ்வேதாவின் தங்கையுடன் சவுடேஸ் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும். அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதுபற்றி அறிந்த ஸ்வேதா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு ஸ்வேதாவின் கழுத்தை இறுக்கி சவுடேஸ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிபுரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?