டியூசனுக்கு வந்த மாணவிக்கு ச*** டார்ச்சர் கொடுத்ததுடன் அந்த மாணவி உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அவரை ஆசிரியையின் கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
டியூசனுக்கு வந்த மாணவிக்கு ச*** டார்ச்சர் கொடுத்ததுடன் அந்த மாணவி உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அவரை ஆசிரியையின் கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் கொடூரங்கள் அரங்கேறி வருகிறது.

சில நேரங்களில் இச்சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வரிசையில் டியூஷன் டீச்சரின் கணவர் டியூஷன் படிக்க வந்த மாணவிக்கு ச*** டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஒரிசா மாநிலம் கைராத் தொகுதிக்குட்பட்ட குரந்தா பஞ்சாயத்து பேரிங்கியா என்ற பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆசிரியையின் வீட்டுக்கு டியூஷன் படிக்க சென்றார், அந்த டியூசன் ஆசிரியையின் கணவர் பெயர் ஜென் , அந்த குறிப்பிட்ட மாணவி மீது பாலியல் ரீதியான ஈர்ப்பு ஏற்பட்டது, அந்த மாணவியை எப்படியாவது அடைய வேண்டுமென ஜென் துடித்தார். அந்த மாணவியை தகாத இடங்களில் கை வைப்பது உள்ளிட்ட பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார்.
இதையும் படியுங்கள்: என் அண்ணனே போய் சேர்ந்துட்டா.. நீ யாரு கூட பேசுற.. பெட்ரூமில் வைத்து அண்ணியை கொத்துக் கறி போட்ட மைத்துன்னன்.
ஒரு கட்டத்தில் தன்னுடன் உடலுறவில் ஈடுபடுமாறு மாணவியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அம்மாணவி அதற்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், ஒரேயடியாக டியூசனுக்கு செல்வதையே நிறுத்தினார். அது ஆசிரியையின் கணவன் ஜென்க்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது, ஆனாலும் அவர் மாணவியை விடவில்லை, மாணவியை அவர் பின் தொடர ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து மாணவி கடைக்குச் சென்றார், அப்போது அங்கு சென்ற ஜென் மாணவியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். தனியாக உள்ள அந்த அறையில் அடைத்து வைத்து மாணவியை உடலுறவுக்கு வருமாறு அவர் கேட்டுள்ளார். அப்போதும் அம்மாணவி அதற்கு இணங்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த ஜென் அந்த மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
இதையும் படியுங்கள்: பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.. கெத்து காட்டிய பெண் எஸ்.ஐ.,.!

இதில் அந்த மாணவி உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் மாணவி சாலைக்கு அலறியடித்து ஓடிவந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாணவியை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவரது உடல் முழுவதும் தீ பரவியது, அதில் மாணவி நிலைகுலைந்து கீழே சரிந்தார் அங்கிருந்தவர்கள் மாணவியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஜென் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
