Asianet News TamilAsianet News Tamil

பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.. கெத்து காட்டிய பெண் எஸ்.ஐ.,.!

கொலை, கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சூர்யாவை பெண் எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

famous rowdy nedungundram suriya Arrest
Author
Chennai, First Published Jul 26, 2022, 1:17 PM IST

கொலை, கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சூர்யாவை பெண் எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது 6 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து  நெடுங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- தந்தை பேச்சை கேட்காமல் காதல் திருமணம்! ஆத்திரத்தில் மகள்,மருமகன் ஆணவக் கொலை? 26 நாளில் முடிந்த வாழ்க்கை.!

famous rowdy nedungundram suriya Arrest

இந்நிலையில்,  2 வழக்கில் சூர்யாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவானார். அவரை பிடிக்க தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். துணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நெடுங்குன்றம் சூர்யா, வழிப்பறியில் ஈடுபட்டதோடு, கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் தனது நொந்த ஊரான நெடுங்குன்றத்தை நோக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

famous rowdy nedungundram suriya Arrest

இதனால் எஸ்.ஐ. மேரி சினி கோம் தலைமையிலான தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும், தப்பிச் செல்ல முயன்ற சூர்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணைக்காக சங்கர் நகர் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் சூர்யாவை போலீசார் தேடி வந்த நிலையில், பாஜவில் இணைந்தார். பின்னர் அந்த கட்சியில் பட்டியல் அணியில் மாநில இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- ஸ்கிப்பிங் கயிற்றால் பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற பெற்றோர்.. வெளியான அதிர்ச்சி காரணம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios