மதுபானம் வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் கழுத்தை நெரித்து அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானம் வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் கழுத்தை நெரித்து அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாநகர் சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (56). இவரது மனைவி குருவம்மாள் (54) . வீட்டின் அருகே வடைக்கடை நடத்தி வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்களது இளைய மகன் மாரி செல்வம் (25). தொழில் கல்வி படித்துக் கொண்டிருந்த இவர் இடைநிற்றலால் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், மதுப்பழக்கத்திற்கு ஆளான இவர் அடிக்கடி மதுபானம் வாங்குவதற்காக பணம் கேட்டு தாய், தந்தையைத் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- படிக்கிற பசங்க ஒன்னு சேர்ந்து.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டானுங்க.. காவல் நிலையத்தில் கதறிய தாய்.!

இச்சூழலில், நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த மாரி செல்வம் பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மாரி செல்வனை ஸ்கிப்பிங் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ். எஸ். காலனி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி துடிதுடிக்க படுகொலை.. 2 பேர் ஐசியுவில்.!

தொடர்ந்து, மாரி செல்வத்தின் பெற்றோர் நாகராஜன், குருவம்மாள் மற்றும் இவர்களது மூத்த மகன் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.