சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன்படி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து 4 பேர் ஆபாச படங்களை பரப்பியதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் குழந்தைகள் ஆபாச படம் படங்களை பரப்பிய விவகாரத்தில் தற்போது 600 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. காணாமல் போன மற்றும் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மையம் அளித்த தகவலின்படி சென்னையில் மட்டும் 150 க்கும் அதிகமான ஐபி முகவரியில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. குழந்தைகள் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்ததாக கண்டறியப்பட்டிருக்கும் ஐ.பி முகவரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு கைது நடவடிக்கை நடக்க இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது வரை இந்த விவகாரத்தில் கோவையில் 40 பேரும் திருச்சியில் 20 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் இதில் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!