Asianet News TamilAsianet News Tamil

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது லாரி மோதி விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துடிதுடித்து பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

6 members of the same family were killed in an accident where a truck collided with a bus in Salem
Author
First Published Sep 18, 2022, 8:22 AM IST

பேருந்து மீது லாரி மோதி விபத்து

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சென்னையில் நடக்கும் பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் ஆம்னி பேருந்தில் புறப்பட திட்டமிட்டார். இதனையடுத்து  சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரவிந்த் என்ற தனியார் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார்.அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில்  பெத்தநாயக்கள்பாளையம் பேருந்து வந்தவுடன் சாலையோரமாக அந்த பேருந்தை நிறுத்தி, பின்பகுதியில் சீர்வரிசை உள்ளிட்ட லக்கேஜ் பொருட்களை  திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தினர் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக பேருந்தின் பின் பகுதியில்  வேகமாக மோதியது.

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளி விடுமுறையா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன புது தகவல்

6 பேர் துடிதுடித்து பலி

இந்த விபத்தில் சம்பவ இடத்தில், திருநாவுக்கரசு, அவரது மகன் ரவிக்குமார், உறவினர்களான செந்தில்வேலன், சுப்ரமணி, ஆம்னி பேருந்து கிளீனர் தீபன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  விபத்தில் சிக்கி காயமடைந்த திருநாவுக்கரசின் மனைவி விஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வந்து பேருந்தில் மோதிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடும்பத்தில் நடைபெறவுள்ள சுப நிகழ்ச்சிக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம்  அந்த பகுதி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

அய்யோ ஆண்டவா.. Exam-க்கு கிளம்ப சொன்ன பாவம்.. 3வது மாடியில் இருந்து தலைகீழா குதித்த +1 மாணவன்..

Follow Us:
Download App:
  • android
  • ios