புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளி விடுமுறையா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன புது தகவல்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டது.

is there a school holiday in tamilnadu like puducherry said minister ma subramanian

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளிலும் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு கல்வித் துறைக்கு அனுப்பிய கடிதத்தில், ‘குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து தொற்று மற்றொருவரிடம் பரவுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிகளவு பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும்.

is there a school holiday in tamilnadu like puducherry said minister ma subramanian

மேலும் செய்திகளுக்கு..ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை தருவார்கள், தயாரா ? அணி திரட்டும் நயினார் நாகேந்திரன் - அதிர்ச்சியில் திமுக

ஆகவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்கலாம். இதன் மூலம் புதுச்சேரியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த இயலும்; என்று கூறியிருந்தார். பிறகு கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘புதுச்சேரி சுகாதாரத்துறை தற்போதைய சூழல் தொடர்பாக கல்வித்துறைக்கு அறிவுறுத்தி இருந்தது. 

குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !

is there a school holiday in tamilnadu like puducherry said minister ma subramanian

அப்போது பேசிய அமைச்சர், ‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல். பெரிய அளவில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போல மாய தோற்றம் உண்டாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியமான 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் அரசின் மீதான கோபத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புகின்றனர். 

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios