ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை தருவார்கள், தயாரா ? அணி திரட்டும் நயினார் நாகேந்திரன் - அதிர்ச்சியில் திமுக
இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.
சமீபத்தில் சென்னையில் விழா ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ,ராசா, ‘இந்துவாக நீ இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக நீ இருக்கிற வரை விபச்சாரியின் மகன், இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசி இருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலும் செய்திகளுக்கு..காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ‘இந்து பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பெண்களும் ஆ. ராசா பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு மோசமான ஒரு மனிதரை நாட்டில் எப்படி வைப்பது? என்கிற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.
அனைத்து பெண்களையும் கேவலமாக பேசிய கருத்தாக இதனை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆ. ராசாவின் கருத்துக்கு தக்க பதிலடி கிடைக்கும். ஆ. ராசா பேசிய கருத்தை எடுத்துரைத்து பாராளுமன்றத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
மாநில காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி. ராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால் பொதுமக்கள் தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !