அய்யோ ஆண்டவா.. Exam-க்கு கிளம்ப சொன்ன பாவம்.. 3வது மாடியில் இருந்து தலைகீழா குதித்த +1 மாணவன்..

தேர்வு எழுதச் செல்லுமாறு தாய் வற்புறுத்தியதால் 11ம் வகுப்பு மாணவன் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி. நகரில் இந்த  துயரம் நடந்துள்ளது

.
 

+1 student commits suicide by jumping upside down from the 3rd floor after being forced by his mother to go to Examination.

தேர்வு எழுதச் செல்லுமாறு தாய் வற்புறுத்தியதால் 11ம் வகுப்பு மாணவன் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி. நகரில் இந்த  துயரம் நடந்துள்ளது.

சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது, நீட் தேர்வு அச்சம், பொதுத் தேர்வில் தோல்வி, ஆசிரியர் திட்டியதால் தற்கொலை,  பாலியல் சீண்டலால்  தற்கொலை என பல காரணங்களால் மாணவர்கள் மரணம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை சகஜமாக இருந்து வருகிறது. பொது மக்கள் மத்தியில் இவைகள் ஒருபுறம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி வரும் நிலையில், 11 ஆம் வகுப்புத் தேர்வுக்கு செல்ல தாய் கூறியதால் மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

+1 student commits suicide by jumping upside down from the 3rd floor after being forced by his mother to go to Examination.

இதையும் படியுங்கள்: ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை கட்டாயப்படுத்தி உடலுறவு.. வேலைக்கு போன இளம் பெண்ணை நாசம் செய்த ஸ்பா உரிமையாளர்.

முழு விவரம் பின்வருமாறு:- சென்னை திநகர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் சுமி (47)  தனது கணவர் ராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கணவனை பிரிந்து மகன் ஹரிஸ்வுடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஹரிஷ் கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று  வந்தார், தற்போது மாணவர்களுக்கு  தேர்வு நடைபெற்று வருவதால் இன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகன் ஹரிஸை இன்று தேர்வு உள்ளது, சீக்கிரம் பள்ளிக்கு கிளம்புமாறு தாய் சுமி வற்புறுத்தினார்.

இதையும் படியுங்கள்: ஃபாரினுக்கு சென்ற கணவர்.. ஏக்கத்தில் பரிதவித்த 39 வயது பெண்.. 25 வயது இளைஞருடன் எஸ்கேப்..!

ஆனால் தூக்கத்தில் இருந்து எழுந்த மாணவன் ஹரிஷ், பள்ளிக்கு செல்ல மாட்டேன், தேர்வு எழுத மாட்டேன் என தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அதில் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஹரில் தாயிடம் வாக்குவாதம் செய்து கொண்டேன், மொட்டை மாடிக்கு சென்றார், பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார், ரத்த வெள்ளத்தில் மயங்கினார், இதைப் பார்த்த காவலாளி அலறியபடி ஹரிஷின் தாய் சுமியிடம் கூறினார், அதைக் கேட்டு தாய் சுமி அலறியடித்து வெளியே ஓடிவந்தார். மகனின் நிலையைக் கண்டு கதறினார், பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஹரிஷை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

+1 student commits suicide by jumping upside down from the 3rd floor after being forced by his mother to go to Examination.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். அதைக் கேட்டு தாய் சுமி தலையில் அடித்து கதறி அழுதார் அது அங்கிருந்தவர்கள் கண்களை கலங்க செய்தது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது,  இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கு போகச் சொல்லி தாய் கூறியதால் மகன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios