நேற்று மாணவி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக மாணவிக்கு விஷம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் மாணவியை தங்களின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள், அவரை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். 

இதுகுறித்து தனது பெற்றோருக்கு அந்த மாணவி செல்போனில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக மாணவிக்கு விஷம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிறகு வீட்டிற்கு வந்தவுடனே மாணவி மயங்கி விழுந்துள்ளார். 

உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் உடற்கூறு ஆய்வின் முடிவுக்கு காத்திருக்கின்றனர். மேலும் அந்த 5 மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : எடப்பாடி கோட்டைக்குள் ‘கெத்து’ காட்டிய சசிகலா.. தீர்ப்புக்கு முன்பும், பின்பும் நடந்த ட்விஸ்ட் !!