தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. ஆட்சியை தக்கவைத்தது போல, கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்த சசிகலாவை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் அறிவித்தனர்.

முதல்வராக சசிகலா முயற்சி செய்து அது நிறைவேறவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. 4 ஆண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் தமிழகம் வந்த சசிகலா சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்தது இதை அடுத்து அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க தான் அனைத்து மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. இரண்டாம் கட்டமாக மார்ச் 21, 22ஆம் தேதிகளில் கும்பகோணம், சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார் இதைத்தொடர்ந்து, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று காலை தனது தி.நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு அவர் திருச்சி செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டத்தை கூட்ட அவரது ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர். ‘தியா­கத்­தாயே, அதி­ச­யமே, பலர் வெளிச்­சத்­திற்கு வர கார­ண­மாக இருந்த தியா­கச்­சு­டரே, தலை­வியே’ என்று சசி­க­லாவைப் புகழ்ந்­து­ரைக்கும் சுவ­ரொட்­டி­களில் அதி­முக நிர்­வா­கி­கள் சில­ரது பெயர்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

குறிப்­பாக கலை­வாணி என்­ப­வரின் பெய­ரில் ஏரா­ள­மான சுவ­ரொட்­டி­க­ளைக் காண முடி­கிறது. சேலம், ஈரோடு, நாமக்­கல், திருப்­பூர், கோவை உள்­ளிட்ட மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கொங்கு மண்­ட­லம் முன்பு அதிமுக கோட்­டை­யா­கக் கரு­தப்­பட்­டது. எனி­னும், அண்­மை­யில் நடந்து முடிந்த நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­மு­க­வுக்கு கொங்கு மாவட்­டங்­களில் எதிர்­பார்த்த ஆதரவு கிடைக்­க­வில்லை. இந்­நி­லை­யில், கொங்கு மண்­ட­லத்­தில் ஓர­ளவு செல்­வாக்கு பெற்­றுள்ள சசி­கலா, அங்கு அர­சி­யல் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­வது அதி­முக தலை­மைக்கு, குறிப்­பாக எடப்பாடி தரப்­புக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக சசி­கலா ஆத­ர­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது. இது சசிகலா தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இருப்பினும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்று பேட்டியளித்துள்ளார் சசிகலா. சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சேலம் வருகை அவர் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க : திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்.! பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த செங்கோட்டையன் !