எங்க வீட்டுக்கு போலாமா.. பக்கா ஸ்கெட்ச் போட்டு 16 வயது சிறுமியை சீரழித்த 2 சிறுவர்கள்
சமீப காலமாக கொலை,கொள்ளை,பாலியல் கொடுமை என வரிசையாக குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உடன்படிக்கும் வேப்பம்பட்டை சேர்ந்த 2 மாணவர்களுடன் நட்பாக பழகி வந்தார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மாணவியை, மாணவர்கள் இருவரும் நைசாக பேசி வேப்பம்பட்டுக்கு அழைத்து சென்றனர். நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் மாணவியும் அங்கு சென்றார். அங்கு மாணவர்களில் ஒருவரது வீட்டுக்கு மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. அப்போது கூட சுதாரித்து கொள்ளாமல் இருக்க, இரு காம கொடூரர்களின் பசிக்கு இரையாகிவிட்டாள்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
மாணவர்கள் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.பிறகு சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் உள்ளதை கவனித்து பெற்றோர் விசாரணை செய்தபோதுஇந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் 2 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!