12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 11ம் வகுப்பு மாணவன்; காவல்துறை விசாரணை
சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 11ம் வகுப்பு மாணவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்ததைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடந்த பெற்றோர் உடனடியாக மாணவியிடம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 11ம் வகுப்பு மாணவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. கூட்டாக சேர்ந்து படிப்பதாக கூறி மாணவனும், மாணவியும் அடிக்கடி தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நிலத்தகராறில் தந்தையை லாரி ஏற்றிக் கொன்ற மகன் கைது
தனிமையின் விளைவாக தற்போது மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் அத்துமீறும் ரௌடிகள்; கலக்கத்தில் வியாபாரிகள்