7ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்..17 வயது பள்ளி மாணவன் செய்த வெறிச்செயல் !
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இவரது தாய் மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்யும் மார்பின் சீரி (25) என்ற வாலிபர் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் வேதனை அடைந்த அந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் அவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் 17 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய மார்பின் சீரியை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.