கண்காணிப்பில் திமுக முக்கிய தலைகள்.. உளவுத்துறை ‘ஷாக்’ ரிப்போர்ட்.! கண்சிவந்த ஸ்டாலின் !!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக அமோக வெற்றி பெற்று உள்ளாட்சிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

The intelligence report on the DMK by election was ordered by MK Stalin dmk party members shocked

அடுத்தகட்டமாக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தலைமை கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. நகர்ப்புற வார்டு கிளை அளவிலான உட்கட்சி தேர்தல் வரும் 22-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.  தற்போது பல்வேறு பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. பேரூராட்சி, நகராட்சியில் கடந்த 22ம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று வரை நடக்கிறது. 

The intelligence report on the DMK by election was ordered by MK Stalin dmk party members shocked

இதில் வட்ட அவைத்தலைவர், வட்டச்செயலாளர்,வட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வாகி வருகின்றனர். மாநகராட்சிகளில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் தொடங்கி மே 1ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். 

கட்சிக்குள் இருக்கும் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம். இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தோம். 'கட்சிக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருடன் கூட்டணி அமைக்காமல் செயல்படுபவர்கள் அடுத்த கட்டமாக லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டிய பொறுப்பு இருப்பதால், திறனுடைய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆனால், கோவையில் தற்போது செயல்படும் நிர்வாகிகள் பலரது மீதும் அதிருப்தி நிலவுகிறது. சட்ட சபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளையும் திமுக இழக்க நேரிட்டதற்கு, கட்சியினர் உள்ளடி வேலை செய்ததே காரணம் என உளவுத்துறை ஏற்கனவே அறிக்கை அளித்திருக்கிறது. இப்போது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியாக சிலர் களமிறங்கினர். சில நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தனர்.

The intelligence report on the DMK by election was ordered by MK Stalin dmk party members shocked

 உள்ளடி வேலை பார்த்தவர்கள், சீட் கொடுக்காததால் ஒதுங்கி நின்றவர்கள், சொன்ன வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தவர்கள், வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என, பலரையும் பட்டியலிட்டு, லிஸ்ட் எடுத்து வைத்திருக்கின்றனர். இதில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்களுக்கு, பொறுப்பு வழங்காமல் ஓரங்கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. வார்டு கமிட்டியில், ஒரு தலைவர், செயலாளர், துணை செயலாளர், மகளிர் துணை செயலாளர், ஆதிதிராவிடர் பிரிவு துணை செயலாளர், பொருளாளர் மற்றும் 5 மேலமைப்பு பிரதிநிதிகள் என, 11 பொறுப்புக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். 

இவர்களில், செயலாளரும், மேலமைப்பு பிரதிநிதிகளும் சேர்ந்து பகுதி கழக பொறுப்பாளர்களை தேர்வு செய்வர். இவ்வாறு படிப்படியாக தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்,பகுதி கழகங்களை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வார்டுகளில் செயல்படக்கூடிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. உள்ளடி வேலை பார்த்தவர்களை கட்சியை விட்டு நீக்குவதற்கு பதில், பதவி வழங்காமல் இருந்தால் போதும். 

அவர்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்' என்றும் கருதுகின்றனர். கோவையில் அமைப்பு ரீதியாக உள்ள 5 மாவட்டம் 3 ஆக குறைக்கப்படலாம் என்கிறார்கள். 3 தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று 3 ஆக குறைக்கப்படும். இதனால் 2 பேரின் பதவி காலியாகும் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற புகாரில் இருக்கும் 2 புள்ளிகளின் பதவிகள் இந்த ஆபரேஷன் மூலம் பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி அதிரடி இடமாற்றம்.! பீதியில் முக்கிய தலைகள் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios