திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த கொடூரன்.. ஓயாத டார்ச்சர் கொடுத்ததால் என்ன செய்தார் தெரியுமா?

பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி உஷா கடந்த 10ம் தேதி வெளியே சென்றவள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

10th Class girl student raped and murder... Boyfriend arrested

திருமணம் செய்து கொள்ளுமாறு பள்ளி மாணவி நெருக்கடி கொடுத்ததால் உஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசியதாக காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மனைவி திலகா (37). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திலகா தனது 15 வயது மகள் உஷாவுடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி உஷா கடந்த 10ம் தேதி வெளியே சென்றவள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர ரூம் போட்டு உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. கதறும் இளம்பெண்.!

10th Class girl student raped and murder... Boyfriend arrested

இந்நிலையில், கடந்த 23ம் தேதி கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமி சடலம் ஒன்று மிதப்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். 

10th Class girl student raped and murder... Boyfriend arrested

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது மாயமான மாணவி உஷா என்பது உறுதியானத. இவர் மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் (19) என்ற வாலிபரை காதலித்து வந்ததும் தெரிந்தது. பிரவீனை தேடியபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பிரவீனை போலீசார் கைது செய்தனர். 

10th Class girl student raped and murder... Boyfriend arrested

கைதான பிரவீன் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறுகையில்: பள்ளிக்கு செல்லும்போது உஷாவுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியுள்ளது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பிரவீன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என மாணவி நெருக்கடி கொடுத்துள்ளார். தினமும் உஷா தொல்லை கொடுத்ததால் கடந்த 10ம் தேதி உல்லாசமாக இருந்துவிட்டு நண்பனின் உதவியுடன் உஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பியுள்ளார். இதனையடுத்து, பிரவீனை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

இதையும் படிங்க;-  தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios