வித்யூத் ஜம்வாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படமான குதா ஹாஃபிஸ் 2ம் பாகம்: அக்னி பரீட்சை வரும் செப்டம்பர் 2ம் தேதி ZEE5 Global-ல் ரிலீஸாகிறது. 

குதா ஹாஃபிஸ் 2ம் பாகம்: அக்னி பரீட்சை, ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தின் 2ம் பாகம் ZEE5 Global டிஜிட்டலில் வெளிவருகிறது. வித்யூத் ஜம்வால், ஷிவலீகா ஓபராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள குதா ஹாஃபிஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் வரும் செப்டம்பர் 2ம் தேதி ZEE5 Global-ல் ரிலீஸ் ஆகிறது. ஷீபா சத்தா, திப்யெந்து பட்டாச்சார்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ஃபருக் கபீரின் இயக்கத்தில், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சினேகா பிமல் பரேக், ராம் மிர்ச்சாந்தனி ஆகியோர் ஜீ ஸ்டுடியோஸ், சினர்ஜி, பனோரமா ஸ்டுடியோஸின் உதவியுடன் குதா ஹாஃபிஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் இது. 

முதல் பாகம்:

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரைப்படம் குதா ஹாஃபிஸ். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தில் சமீர் சௌத்ரி, இந்து - முஸ்லீம் கலப்பு திருமணம் செய்த தம்பதியின் மகளான நர்கீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். சமீருக்கு முன் நர்கீஸுக்கு விசா கிடைத்து நோமனுக்கு செல்கிறார். நோமனில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட நர்கீஸை, சமீர் மீட்டு அழைத்துவருவது தான் முதல் பாகம்.

2ம் பாகம்:

கடத்தப்பட்டதால் பயத்திலேயே இருக்கும் நர்கீஸ் மற்றும் சமீர் தம்பதி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் ஆதரவற்ற குழந்தையான நிவேதிதா வருகிறார். அந்த குழந்தையை தத்தெடுத்து ஒரு குடும்பமாக இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ நினைக்கின்றனர் சமீர் - நர்கீஸ் தம்பதி. நர்கீஸ் கடத்தப்பட்ட பயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்குள்ளாக, நிவேதிதா கடத்தப்படுகிறார். இந்த கடத்தல் சம்பவம், சமீர் - நர்கீஸ் தம்பதி மீண்டும் மனநிம்மதியை இழக்கிறது. அந்த நகரின் பிரபலமான நபராக திகழும் தாகூர் ஜி-யின் பேரன் தான் இந்த கடத்தலை அரங்கேற்றியவன். தனது மகளை கண்டுபிடிக்க எந்த எல்லைக்கும் செல்ல துணிகிறார் சமீர். குதா ஹாஃபிஸ் 2ம் பாகம்: அக்னி பரீட்சை திரைப்படம், மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்.

குதா ஹாஃபிஸ் 2ம் பாகம் செப்டம்பர் 2ம் தேதி ZEE5 Global-ல் வெளியாகிறது.