zee tamil vijayadasami and Aayutha poojai special: வரும் ஆயுத பூஜை & விஜயதசமி பண்டிகை தினங்களில்.. Zee தமிழில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகளின் முழு விவரங்கள் இதோ.
ஜீ தமிழில் ஆயுத பூஜை & விஜயதசமி பண்டிகை ஸ்பெஷல் நிகழ்ச்சி
அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பண்டிகை நாட்களிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி, நேயர்களுக்குப் பிரமாண்டமான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் திரைப்படங்களுடன் விருந்து படைக்கத் தயாராகியுள்ளது. காலை 8 மணி முதல் தொடர்ச்சியான இந்தச் சிறப்புப் படைப்புகளைக் காணத் தயாராகுங்கள்! அக்டோபர் 1: ஆயுத பூஜை தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரம் : ஆயுத பூஜை நாளான அக்டோபர் 1 அன்று, காலை 8:00 மணிக்கு, புகழ்பெற்ற தமிழ் அறிஞர் கலைமாமணி சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் சிறப்புப் பட்டிமன்றம் தொடங்குகிறது. இதில், 'பாரதியின் புரட்சிப் பெண்கள் நம்மிடையே வாழ்கிறார்களா? அல்லது கவிதைகளில் மட்டுமா?' என்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.
ஜோதிகா கர்ப்பமாக இருந்தபோது சூர்யா இப்படியெல்லாம் செய்தாரா? நடிகை பகிர்ந்த சீக்ரெட்!
அதனைத் தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, தனுஷ் இயக்கி, பவிஷ் நாராயண் மற்றும் அனிகா சுரேந்திரன் நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) ஒளிபரப்பாகிறது. நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்கு செல்ல அங்கு என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

அதன் பின்னர், காலை 11:30 மணிக்கு, சந்தானம் நடிப்பில் வெளியான நகைச்சுவை மற்றும் சாகசப் படமான DD நெக்ஸ்ட் லெவல் திரையிடப்படுகிறது. மேலும் மதியம் 2:00 மணிக்கு, ரசிகர்களின் விருப்பமான ஜீ தமிழ் நட்சத்திரங்கள் பாரம்பரிய விளையாட்டுகளுடன் கொண்டாடும் கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சியான "கலட்டா பூஜை: ஒளிபரப்பாகிறது. இதில் மிர்ச்சி விஜய் மற்றும் மணிமேகலை தொகுப்பாளர்களாக இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். இறுதியாக, மாலை 4:30 மணிக்கு, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி, பரபரப்பான தொடர் கொலை மர்மத்தை வெளிப்படுத்தும் அதிரடித் திரைப்படமான மார்கன், உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகி, நேயர்களை இருக்கை நுனியில் அமர வைக்க உள்ளது.
அக்டோபர் 2: விஜய தசமி தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரம் :
விஜய தசமி தினமான அக்டோபர் 2 அன்று, அதே உற்சாகத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. காலை 8:00 மணிக்கு, கலைமாமணி சுகி சிவம் நடுவராக, பங்கேற்க 'பொதுமக்களிடம் அறிவார்ந்த விழிப்புணர்வு கூடியுள்ளதா? கூடவில்லையா?' என்ற சுவாரஸ்யமான தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, சமுத்திரக்கனி நடிப்பில், நேர்மை, தியாகம் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட, திரு.மாணிக்கம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதில், ஒரு லாட்டரி சீட்டின் மூலம் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

அதைத் தொடர்ந்து, காலை 11:30 மணிக்கு, விஜய் இரட்டை வேடங்களில் நடித்து, வெங்கட் பிரபு இயக்கிய அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான GOAT (The Greatest of All Time), சஸ்பென்ஸும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த காட்சிகளுடன் ஒளிபரப்பாக உள்ளது.
அடுத்ததாக மதியம் 2:00 மணிக்கு, ஜீ தமிழ் சீரியல்களின் முன்னணி நட்சத்திரங்கள் வேடிக்கையான டாஸ்க்குகள் மூலம் தங்கள் புரிதலை நிரூபிக்கும், கொண்டாட்ட நிகழ்ச்சியான 'ஜீ ஸ்டார்ஸ் சங்கமம்' ஒளிபரப்பாகிறது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இறுதியாக, மாலை 4:30 மணிக்கு, தர்ஷன், ஆர்ஷா பைஜு நடிப்பில், காதல், கனவுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான ஹவுஸ்மேட்ஸ், உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பப்படுகிறது.
இந்த இரண்டு பண்டிகை நாட்களிலும், ஜீ தமிழ் நேயர்களுக்கு மறக்க முடியாத பொழுதுபோக்கு நிச்சயம்! எனவே அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், காலை 8 மணி முதல், ஜீ தமிழுடன் இணைந்து பண்டிகையை கொண்டாட தயாராகுங்கள்.
