புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...? என்கிற பழமொழிக்கு ஏற்றப்போல் இது வரை 120க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. 

மதம் மாற்றம்:

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, கடந்த சில வருடங்களுக்கு முன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார் இதனால் இவருடைய தந்தை இளையராஜாவிற்கும் யுவனுக்கும் இடையே சிறு கருத்து வேறுப்பாடும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம்:

இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் 'சஃரூன் நிசார்' என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

காஸ்டியூம் டிசைனர்:

இத்தனை நாட்கள் பொறுப்பான குடும்பத்தலைவியாக இருந்த யுவனின் மனைவி தற்போது காஸ்டியூம் டிசைனர் அவதாரம் எடுத்துள்ளார். பிக் பாஸ் ரைசா கதாநாயகியாக நடித்து வரும் 'பியார் ப்ரேமம் காதல்' படத்தில் ரைசாவிற்கு காஸ்டியூம் டிசைனராக உள்ளாராம்.

முதல் முறையாக இந்தப்படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமாகி இருக்கும் இவர் தொடர்ந்து பல படங்களில் பணியாற்ற ஏசியாநெட்டின் வாழ்த்துக்கள்.