தன்னை விட இளைய இசையமைப்பாளரின் படத்தில் யுவன் பாடியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது....
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஆதி. ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற தமிழ் மெல்லிசை குழு மூலமாக ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, இசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
அதனைத் தொடர்ந்து நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து நான் சிரித்தால், நட்பே துணை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறது சத்யஜோதி நிறுவனம். இதனை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.
'அன்பறிவு' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்து வருகிறார்கள்.

ஆதியின் "அன்பறிவு"நேரடியாக ஓடிடி -ல் வெளியாகவுள்ளது. DisneyPlusHS-ல் வெளியாகவுள்ள இந்த படம் வரும் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவி புகழ் முத்து சிற்பி இந்த படத்தில் படியுள்ளதை ஆதி அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆதியின் இசையில் இளைஞர்களின் மனதை வென்ற யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தன்னை விட இளைய இசையமைப்பாளரின் படத்தில் யுவன் படியுள்ளது ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
