தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள யுவன் ஷங்கர் ராஜா ‘நாங்க வேற மாரி’ பாடல் 10 மில்லியனைக் கடந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: ரஜினியை அடுத்து சிரஞ்சீவிக்குமா?... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...!

படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அத்தோடு புரோமோஷன் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவும், தல அஜித் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும் நேற்று முன் தினம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முதல் 7 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவித்த படக்குழு, அதற்கு சில நொடிகள் முன்னதாக 10.45 மணிக்கு பாடலை ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்தது. அப்போதும் சில நிமிட தாமத்திற்கு பிறகு நாங்க வேற் மாரி எனத் தொடங்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: 2 வருஷத்துக்கு கிடையாது... விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட திடீர் கன்டிஷன்...!

இரவு நேரம் என்றாலும் தல ரசிகர்கள் காத்திருந்து பாடலை என்ஜாய் செய்தனர். விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியான இந்த பாடல் தான் படத்தில் அஜித்திற்கான இன்ட்ரோ எனக்கூறப்படுகிறது. பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வரும் வலிமை பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக வலிமை பட குடும்பத்தினருடன் அஜித் ஹேப்பியாக இருக்கும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள யுவன் ஷங்கர் ராஜா ‘நாங்க வேற மாரி’ பாடல் 10 மில்லியனைக் கடந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.