நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நயனுக்க்கும் - விக்கிக்கும் விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின

காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது காதலி நயனுடன் இருக்கும் புகைப்படங்களை வேறு பகிர்ந்து முரட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றி வருகிறார். இதுவரை காதலில் மட்டும் இணைந்திருந்த விக்கி - நயன் புதிய தொழில் ஒன்றிலும் இறங்கியிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சினிமாவில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக வேலைகளிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். மேலும் தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து சாய் வாலா நிறுவனத்தில் ரூ. 5 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகின. நயன் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் முதலீடு செய்துள்ளதாக செய்தி. 

இதனிடையே நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நயனுக்க்கும் - விக்கிக்கும் விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ‘ஒரு வழியா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப்போறாங்களே’ என ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது. 

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இரண்டு பட டீலில் கையெழுத்திட்டிருக்கிறார். நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்திக்கு போனால் இடையிலேயே விட்டுவிட்டு வரக்கூடாது என்பதால் மேலும் சில படங்களை கமிட் செய்யப்போகிறாராம். அதனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிசியாக இருப்பதால் இப்போதைக்கும் கல்யாணம் வேண்டாம் என விக்னேஷ் சிவனுக்கு நயன் கன்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.