பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜாவின் ஆடி கார் நேற்று திருடு போனதாக கூறப்பட்டது. ஊடகங்கள் மற்றும் செய்திகளிலும் இந்த தகவல் வைரலாக பேசைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து யுவன் தரப்பில் இருந்து போலீசில் புகார் செய்யப்பட்டிருந்து. 

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர், ஆனால் உண்மையில் இவருடைய கார் திருடு போகவில்லையாம்.  வழக்கமாக நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தாமல் இடம் மாற்றி டிரைவர் காரை நிறுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை என தெரியவந்துள்ளது. 

யுவன் சங்கர்ராஜாவின் டிரைவர் வழக்கமாக காரை நிறுத்தும் இடத்தில் இடம் இல்லாததால் அதே அப்பார்ட்மென்டின் உள்ளேயே வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு காரின் அருகிலேயே படுத்து தூங்கிவிட்டார். சார்ஜ் இல்லாததால் அவருடைய போன் ஸ்விட் ஆப் ஆகியுள்ளது. பல முறை இவருடைய போனுக்கு முயற்சி செய்தும் லைன் கிடைக்காததால் யுவன் சங்கர்ராஜா போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 

போலீசார் அந்த ஓட்டுனரின் தொலைபேசியை ட்ரேஸ் செய்தபோது அது, யுவன் சங்கர் ராஜாவின் வீட்டின் அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக யுவன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர் அப்போது, காரை இடம் மாற்றி திருத்தியதாலும், டிரைவர் போன் ஸ்விச் ஆப் ஆனதாலும் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என யுவன் தரப்பில் இருந்து தெரிவித்து, பொலிசாருக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.