- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மனைவி என்று கூட பார்க்காமல் சுகன்யாவிற்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த நியாயஸ்தன் பழனிவேல்!
மனைவி என்று கூட பார்க்காமல் சுகன்யாவிற்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த நியாயஸ்தன் பழனிவேல்!
Palanivel Strict Warning to Suganya Gandhimathi Stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காந்திமதி ஸ்டோர்ஸ் கடை வியாபாரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் கடை திறந்து பாண்டியனுக்கு கோபமில்லை. ஆனால், அவர் ஒரே தெருவில் ஏற்கனவே தனது கடை இருக்கும் அதே தெருவில் எப்படி இவ்வளவு பெரிய கடையை திறக்கலாம் என்று தான் கோபப்பட்டுள்ளார். மேலும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் துரோகம் செய்துவிட்டதாக கூறி பழனிவேலுவை வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
காந்திமதி ஸ்டோர்ஸ் கடை
காந்திமதி ஸ்டோர்ஸ் கடை திறந்த பிறகு பழனிவேல் சந்தோஷமாகவே இல்லை. இதற்கு காரணம் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் தான். பாண்டியனை பழி வாங்க பழனிவேலுவை பயன்படுத்திக் கொண்டனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் தான் பாண்டியனின் கடை இருக்கும் தெரு. மேலும் அவருக்கு தெரிந்த மளிகை கடையை வைத்து கொடுத்து பாண்டியனை பழி தீர்த்துக் கொண்டனர். நாளுக்கு நாள் வியாபாரமும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. லாபமும் அதிகமாக வருகிறது என்று சுகன்யாவும் கூறியிருந்தார்.
காந்திமதி ஸ்டோர்ஸ்
இதற்காக அவர் தேர்வு செய்த யுக்தி தான் பலரையும் வியக்க வைத்தது அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் கிளை தான் இந்த கடை என்று சொல்லி சொல்லியே வியாபாரம் பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் பாண்டியன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களை வழி மறித்து தனது கடையில் அது இலவசமாக தருகிறேன், இது இலவசமாக தருகிறேன் என்று சொல்லி வர வைத்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார்.
சுகன்யாவை கண்டித்த பழனிவேல்
சுகன்யாவை கண்டித்துள்ளார். இந்த கடையும் சுகன்யாவின் வற்புறுத்தலால் தான் திறக்கப்பட்டது. மேலும், சுகன்யாவின் கடைக்கு பக்கபலமாக இருப்பது குமரவேல் தான். 3 பொருள் வாங்கினால் ஒரு சோப் இலவசம், ரூ.500 பொருள் வாங்கினால் ஒரு கிலோ சர்க்கரை இலவசம், ரூ.1000க்கு பொருள் வாங்கினால் அரை லிட்டர் எண்ணெய் இலவசம் என்று அடுக்கடுக்காக அள்ளிவிட்டார். இப்படி வாடிக்கையாளர்களை தங்களது பக்கம் இழுத்து கடையில் வியாபாரம் செய்தார். இதைப் பார்த்த பழனிவேல் ஆத்திரமடைந்த நிலையில், அடுத்தவர்கள் பொழப்பை கெடுக்க இப்படி யார் கிட்ட கத்துக்கிட்டு வந்தாள் என்று தெரியவில்லை.இதை நான் வேரு கற்றுக் கொள்ள வேண்டுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை விட இங்கு ஏன் சாமான்களை கம்மியான விலைக்கு கொடுப்பதாக சொல்லி சொல்லி வியாபாரம் பார்க்கிற? தப்பு சுகன்யா நீ இனிமேல் இப்படி செய்யாத. வளர்த்துவிட்டவர்களுக்கு எதிராக துரோகம் செய்வது ரொம்பவே தப்பு. நியாயமா என்னால் என்ன சம்பாதிக்க முடியுமோ அது எனக்கு கிடைத்தால் போதும். இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரை இங்கு யாரும் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார்.