தற்போதைய கல்வி முறையின் அவலத்தை தோலுரித்து காட்டும் சமூக அக்கறையுடன் கூடிய படமாக உருவாகியிருக்கும் 'ஹீரோ' படத்தில், சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். 

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


அதேநேரம், ஹீரோ படத்திற்கான ப்ரமோஷன் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ள படக்குழு, ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தந்து அசத்தி வருகிறது. ஏற்கெனவே, படத்தின் டீசர் மற்றும் மால்டோ கித்தாப்புல ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. 

அதைத் தொடர்ந்து, படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக்கான 'ஹீரோ' பாடல் இன்று (நவ.29) வெளியாகியுள்ளது. இதனை, சிவகார்த்திகேயனே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஹீரோவுக்கான அடையாளத்தை கூறும் விதமாக அமைந்துள்ள இந்தப் பாடலை, கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார். 

படத்தின் டைட்டில் ட்ராக்கான 'ஹீரோ' பாடலை யுவன் ஷங்கர் ராஜாவே பாடியுள்ளார். அவரது வசீகரக் குரலில், துள்ளலான இசையில் வெளியாகியிருக்கும் 'ஹீரோ' பாடல், ‘மால்டோ கித்தாப்புல பாடலை போன்றே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஹீரோ' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.