Kaathu Karupu Kalai : ரீலிஸ் மற்றும் பிற சமூக ஊடகங்கள் வழியாக மக்கள் மத்தியில் பிரபலமான இளைஞர் தான் கலை என்னும் காத்து கருப்பு கலை.

Youtube பிரபலங்கள் பலரும் தற்பொழுது தொடர்ச்சியாக சினிமா துறையில் அறிமுகமாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இயக்குனர் செல் ஆம் என்பவர் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் பிரபல Youtuber டிடிஎஃப் வாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. "மஞ்சள் வீரன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

இந்த சூழலில் அவருக்கு போட்டியாக யூடியூப் மூலம் பிரபலமான மற்றொரு இளைஞரான "காத்து கருப்பு" கலை நடிக்கும் புதிய படம் ஒன்று தற்பொழுது உருவாகி வருகிறது. அந்தப் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க புதுமுக நடிகை ஒருவர் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கான பூஜை தற்பொழுது நடைபெற்றுள்ளது.

Sai Pallavi Party Photos: சரக்கு பார்ட்டியில்.. குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி வைரலாகும் போட்டோஸ்!

இந்த நிலையில் பட குழுவை சேர்ந்த ஒருவர் காத்து கருப்பு கலைதான் அடுத்த தளபதி என்று கூறி அவரை அறிமுகம் செய்து அதிர்ச்சியை கிளப்ப, அந்த படத்தில் ஒரு வசனத்தை பேசி காட்டிய கலை, இந்த வசனம் இந்த திரைப்படத்தில் இருந்ததால் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசிய அந்த வசனம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Scroll to load tweet…

புதுமுகங்கள் சினிமாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், திறமை இல்லாத பலருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக பலரும் தங்கள் வருத்தத்தை கூறி வருகின்றனர்.

அப்போ நடிகர் சங்க கட்டிடம் சீக்கிரம் ரெடியாகிடும்.. பெரும்தொகையை அள்ளிக்கொடுத்த உலக நாயகன் - எவ்வளவு தெரியுமா?