தல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லரில்  அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றத்தையும், அசத்தலான நடிப்பையும் பார்த்து மிரண்டுள்ளதைப் போல, யூடியூபில் அஜித் டிரெய்லர் செய்த சாதனையைப் பார்த்து அந்த நிறுவனமே ட்வீட் போட்டுள்ளது.

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.  

வெறித்தனமான வாதமும், அசத்தலான ஆக்ஷன் ஸீனும், கோர்ட்டில் வாதாடும் ஸீன் என அஜித்தின் அசத்தலான நடிப்பும் என தல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை டிரைலரை பார்த்து மிரண்டு போய்யுள்ளனர். அஜித்தின் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்குவர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று  யூடியூபில் வெளியாகி  ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதுமட்டுமல்ல வந்த 12 நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் தாண்டி சாதனை படைத்தது. 19 மணிநேரத்தில் 5.7 மில்லியன் 57 லட்சம்+ பார்வைகளை சாதனை படைத்துது. இந்த படத்தின் ட்ரெய்லர்  யூடியூபில் இந்தியளவில் முதல் இடத்தில் இருந்தது மட்டுமல்ல, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் முதல் இடத்தில் இருந்தது.

நேற்று மாலை  6 மணிக்கு ரிலீஸ் ஆனது ரிலீஸான ட்ரெய்லர் தற்போது வரை யூடியூபில் பிரமாண்ட சாதனையை செய்து வருகிறது. மேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனையை பார்த்து அதிர்ந்துப்போன,  யூடியூப் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில், தல அஜித் மீண்டும் தன்னை கிங் ஆஃப் கோலிவுட் என நிரூபித்துள்ளார். மேலும், ஃ பஸ்ட் லுக்கிலேயே கவர்ந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளது.