பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய தந்தைக்காக, கல்லீரலை தானமாக வழங்கி, ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.

மலையாள இளம் இயக்குனர் அதின்  ஒல்லுரின், தந்தைக்கு கடந்த சில தினங்களுக்கு முன், உடல்நல குறைவு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதி பட்டு வந்த அவருக்கு, யாரேனும் முன் வந்து கல்லீரல் தானம் கொடுத்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, தன்னுடைய தந்தைக்காக இளம் இயக்குனர் அதின் ஒல்லுர் கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார். இதை அடுத்து, கடந்த மே 18-ஆம் தேதி ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 

இதுகுறித்து முதல் முறையாக இயக்குனர் அதின் ஒல்லுர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்து,  இருவரும் நலமாக உள்ளோம். நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறேன். எனது தந்தையும் சீக்கிரமே செய்யப்படுவார். நண்பர்களுடைய பிராத்தனைகளுக்கு நன்றி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எனது நன்றிகள்" என்று கூறியுள்ளார்.

இளம் இயக்குனர் அதின் ஒல்லூரின் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த வரும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தையின் உயிரை காப்பாற்ற, இவர்... கல்லீரல் தானம் வழங்கியுள்ளது ரசிகர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.