you want hero chance asking actor parthiban
தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டும் இல்லாமல் தன்னுடைய இயக்கத்திலும் புதுமையான கருத்துக்களை வைத்து சிந்திக்க தூண்டுபவர் நடிகர் பார்த்திபன்.
சினிமாவில் மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக விழிப்புணர்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.
அதில் குறிப்பாக வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் குழந்தைகளை படிக்க வைப்பது, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து கொடுப்பது , சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு உதவிகள் செய்தது போன்ற பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "நீங்களும் ஹீரோ ஆகணுமா...?" என்று எழுதப்பட்ட ஒரு பதாகையோடு போஸ் கொடுத்துள்ளார். அதற்கு கீழே சினிமாவில் நடித்தால் ரீல் ஹீரோவாக தான் ஆகமுடியும், ரத்த தானம் செய்தால் ரியல் ஹீரோவாக மாறலாம் என பதிவிட்டு சமூக கருத்தை தெரிவித்துள்ளார்
