யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜாம்பி' . இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ஹாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.

செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், என ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க கூடிய காமெடியனாக தற்போது வளர்ந்துள்ளவர் யோகிபாபு. இவரின் நடிப்பு, பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்தும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதே போல், தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜாம்பி' படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு டான்னாக வந்து காமெடியில் கலக்க உள்ளார் யோகிபாபு. 

ஜாம்பி பேய்யுடன் ஃபைட் மற்றும் யாஷிகாவோடு டான்ஸ் என இந்த படத்தில் கலக்கியுள்ளார் யோகிபாபு. மேலும் இதுவரை யோகி பாபு நடித்துள்ள படங்களில் இருந்து, இப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான பேய் மற்றும் திரில்லர் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி, காமெடி கலந்து உருவாக்கியுள்ளதால் ரசிகர்களும் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.