கொரோனா தடுப்பு பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்தியா முழுவதிலும் உள்ள திரைத்துறையை சேர்ந்த பல தின கூலி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அந்தந்த திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அவர்களால் முடிந்த உதவி தொகையை அறிவித்து வருகிறார்கள். அதே போல் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், பெப்சி தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பணமாகவும் பொருளாகவும் வழங்கியுள்ளனர்.

அதே போல் கோலிவுட் முன்னணி நடிகர்களிடம்... நலிந்த கலைஞர்களுக்கு உதவும்படி வாய்விட்டு கேட்டும், இதுவரை பெரிதாக யாரும் தங்களுடைய உதவிகளை அறிவிக்கவில்லை. 

ஏற்கனவே நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, உதவி செய்ததோடு, நேற்றைய தினம் 500 மூட்டை அரிசி, பருப்பு போன்றவற்றை நலிந்த நடிகர் மற்றும் நாடக கலைஞர்களுக்கு வழங்கினார் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இதே போல், நடிகர் யோகி பாபுவும் அவர்களுடைய பசியை போக்கும் விதமாக அரிசி மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கினார். இவர்களை தொடர்ந்து நடிகர் விவேக் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்காக ரூ. 3 . 5 
 லட்சம் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியையும் அறிவிக்காத நிலையில், காமெடி வேடத்தில் நடித்து புகழ்பெற்ற இரண்டு பிரபலங்கள் ஓடி வந்து உதவியுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.