யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான 'தர்ம பிரபு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.  இதைதொடந்து வரிசையாக இவரை தங்களுடைய படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

கை நிறைய படங்கள் உள்ளதால், குறித்த நேரத்தில் நடித்து கொடுக்க தூக்கத்தை தொலைத்து, படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் யோகிபாபு. இது ஒரு புறம் இருக்க இவருக்கு இவருடைய அம்மா தீவிர பெண் தேடுதல் படலத்தையும் நடத்தி வருகிறாராம்.

தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஏற்கனவே நயன்தாராவுடன் 'கோலமாவு கோகிலா' படத்தில், கல்யாண வயசு தான் வந்துடுச்சி டி, பாடலுக்கு நயன்தாராவுடன் டூயட் பாடி இருந்த யோகி பாபு. தற்போது அஞ்சலியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளாராம்.

 ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களின் வரிசையில் பேஸ்கட்பால் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும், இந்த படத்தை இயக்குனர்  கிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டதுமே அஞ்சலி உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஞ்சலியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்க உள்ளதாகவும். இவர் அஞ்சலியுடன் ஒருதலை காலத்தை நினைத்து டூயட் பாடும் காட்சிகளும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பேஸ்கட்பால் வீராங்கனை கேரக்டரில் நடிக்க உள்ள அஞ்சலி,  இந்த படத்திற்காக சில நாட்கள் பேஸ்கட்பால் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.