யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் 'லக்கி மேன்' படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சமீப காலமாகவே காமெடி நடிகர்கள் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகர்களாக நடித்து வந்த வடிவேலு, சந்தானம், ஆகியோரை தொடர்ந்து யோகி பாபு அதிக அளவிலான ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வடிவேலு மற்றும் சந்தானம் நடித்த ஹீரோ சப்ஜெக்ட் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு கூட யோகி பாபுவின் படங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்த 'பொம்மை நாயகி' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... யோகி பாபு அடுத்ததாக கதையின் நாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர், ஆர்.ஜே மற்றும் வி.ஜே-வாகப் பிரபலமான பாலாஜி வேணுகோபால் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 'லக்கி மேன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், உண்மையில் அதிர்ஷ்டம் என்றால் என்ன? என்பதை பற்றி காமெடியாக பேசும் விதத்தில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நாம் கவனிக்க தவறிய சில விஷயங்கள் கதாநாயகனின் வாழ்க்கையில் எவ்வாறு பிரச்னையை ஏற்படுத்துகிறது? அதில் இருந்து நாயகன் எப்படி மீண்டு வருகிறார்... என்பதை எதிர்பார்க்காத திருப்பு முனைகளுடன் இப்படத்தை இயக்க உள்ளார் பாலாஜி வேணுகோபால்.

Scroll to load tweet…

விறுவிறுப்பாக உருவாக உள்ள இந்த படத்திற்கு, சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். யோகி பாபுவை தவிர, இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, அமித் பார்கவ், ஆர்எஸ் சிவாஜி மற்றும் சாத்விக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.