காமெடி நடிகர் யோகிபாபு, தர்ம பிரபு படத்தின் மூலம் ஹீரோவாக ஆகிவிட்டார். நேற்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இனி இவரை ஹீரோவாக புக் பண்ண இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இனி ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என விடாப்பிடியாக கூறியுள்ளார் தர்மபிரபு.

தர்மபிரபு படத்தை ரசிகர்களுடன் தியேட்டர் பார்த்த யோகிபாபு வெளியே வந்தவுடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மேலும், இனி வழக்கம்போல் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி மட்டும் தான் செய்வேன். இரண்டு நண்பர்களுக்காக தான் கதையில் ஹீரோவாக நடித்தேன். இனி ஹீரோவாக நடிக்க போவதில்லை என தன்னுடைய முடிவை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.