4 காமெடி நடிகர்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படம். 

இந்த படத்தில், தம்பி ராமய்யா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ராம் சுந்தர் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.

இயக்குனர் புகழ்மணி இயக்கம் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்தேவா இசையமைக்கிறார். ஆரூரான் என்பவர் தயாரிக்கிறார். 

இப்படத்தில் யோகி பாபு காதலை சேர்ந்து வைக்க போராடுபவராக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காதலை பிரிக்கும் தாதாவாக நடிக்கிறார். மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.