Asianet News TamilAsianet News Tamil

'பேய் மாமா' படத்திற்கு கிடைத்த வரவேற்பு..!! உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகை ரேகா..!!

நடிகை ரேகா (Rekha) பத்திரிகையாளர்கள், தொடர்ந்து இந்த படத்திற்காக தன்னை பாராட்டி வருவதாக கூறி மிகவும் சந்தோசகமாக தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

yogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal words
Author
Chennai, First Published Sep 24, 2021, 5:53 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இயக்குனர் சக்தி சிதம்பரம் (Sakthi Chidhambaram) இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் 'பேய் மாமா' (Pei mama). இந்த படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு (yogi babu) , கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  மேலும் மாளவிகா மேனன் (Malavika Menon), மனோபாலா (manobala), மொட்ட ராஜேந்திரன்(mottai Rajendran), நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர் (ms basker), இமான் அண்ணாச்சி (iman Annachi), கோவை சரளா (kovai sarala) உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: அடுத்த பைக் ரெய்டுக்கு பக்கா பிளான் போட்ட அஜித்! எங்கெல்லாம் போகிறார்? வெளியானது ரீசென்ட் போட்டோஸ்..!

இப்படத்தை ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவர் இணைந்து தயாரித்துள்ளனர். திகில் மற்றும் காமெடி கதைக்களத்துடன் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தில், அனைவரது நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை ரேகா பத்திரிகையாளர்கள், தொடர்ந்து இந்த படத்திற்காக தன்னை பாராட்டி வருவதாக கூறி மிகவும் சந்தோசகமாக தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

yogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal words

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்... "நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப் படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள்.

மேலும் செய்திகள்: நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டி! ஒரே கலர் உடையில் ஒன்று திரண்ட பிரபலங்கள்! தெறிக்கவிடும் போட்டோஸ்!

எப்போதும் போல உங்களின் ஒத்துழைப்புக்கும் மரியாதைக்கும் என்றும் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு பல பத்திரிக்கை சொந்தங்கள் என்னை அழைத்து பாராட்டி தியேட்டரில் சிரித்து மகிழ்ந்த தகவலை பகிர்ந்து கொண்ட போது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

yogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal words

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்த போது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிப்பதால் உனக்கு என்ன கௌரவ குறைச்சல் வந்துவிட போகிறது. எல்லாவகையான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்ள கூடாது என்று என் உள் மனது சொன்னது.

மேலும் செய்திகள்: கணவனால் கைவிடப்பட்டு ஓலா டாக்சி ஓட்டும் சிம்பு பட நடிகை..!! உருக்கமான தகவலை வெளியிட்ட பிரபல நடிகர்..!!

என்னுடைய திரை வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையை விட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைகள்தான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்னை நகைச்சுவை நடிகையாக பார்த்தார். எனக்குள் இருக்கும் அந்த திறமையை மக்களுக்கு அந்த பாத்திரம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

yogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal words

ஒரு வழியாக தைரியமாக மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் நடித்தேன். இப்போது நீங்கள் பாராட்டுவதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன். என்னால் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்கள் வாழ்த்துக்கள் மூலம் கிடைத்திருக்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios