கணவனால் கைவிடப்பட்டு ஓலா டாக்சி ஓட்டும் சிம்பு பட நடிகை..!! உருக்கமான தகவலை வெளியிட்ட பிரபல நடிகர்..!!
சிம்பு (Simbu ) நடித்த 'வல்லவன்' (Vallavan movie) படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை லட்சுமி (Lakshmi ), என்பவர் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தற்போது ஓலா (OLA )கார் ஓட்டுவதாக காதல் சுகுமார் (Sugumar ) தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துணை நடிகைகளின் நடிப்பு சில சமயங்களில் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், பல சமயங்களில் பேசப்படுவது இல்லை. அதே போல், அவர்கள் திருமணத்திற்கு பின் வாய்ப்புகள் கிடைக்காததால் முழுமையாக திரையுலகை விட்டு விலகிவிடும் சம்பவங்களும் நடக்கிறது.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் காதல் சுகுமார், சிம்பு, நயன்தாரா, ரீமாசென். உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வல்லவன்' மற்றும் இன்னும் சில படங்களில் நடித்த துணை நடிகை லட்சுமி என்பவரை பற்றி மிகவும் உருக்கமாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுறுது அவர் போட்டுள்ள பதிவில், வல்லவனில் ..ஸ்கூல் போர்ஸனில் நகைச்சுவை காட்சி ஒன்றில் சந்தானம் பேப்பரை தூக்கி எறிய அதை எடுக்கும் மாணவி "என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற.. எதாச்சும் எழுதிக்குடு" என்று அதகளம் பண்ணியிருக்கும்.. சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள்.
எனக்கு அடையாளமே தெரியவில்லை. இன்னும் நடிப்பில் பட்டைய கெளப்பும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள்.. இப்போது கணவனால் கைவிடப்பட.. ஓலா டாக்ஸி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள். முடிந்தவரை வாய்ப்புகள் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாய்ப்புகள் அமையட்டும் லக்ஷ்மி. என குறிப்பிடடுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.