'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய, நடிகர் யோகி பாபு, தன்னுடைய திருமணம் பற்றி தலைவரே கூறி விட்டார். அப்போ, கண்டிப்பா நடந்து விடும் என, கலாய்த்து கொண்டே பதில் கொடுத்துள்ளார்.

மேடைக்கு வந்து பேசிய யோகிபாபுவிடம், தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய VJ ரம்யா, உங்கள் திருமணம் எப்போது என கேட்டார்.

இதற்கு யோகி பாபு, "நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு, கல்யாணம் தான் முக்கியமா உங்களுக்கு? என கலாய்த்து விட்டு,  சீக்கிரமே நடந்துடும். 

தலைவரே தன்னை அழைத்து 'யோகி பாபு உங்களுக்கு தை மாசம் கல்யாணம் நடந்துடும்'னு சொன்னார். அவரே சொல்லிவிட்டார் எனவே கண்டிப்பாக நடந்து விடும் என கூறியுள்ளார். இதனால் எப்படியும் தை மாசம் யோகி பாபுவுக்கு 'டும் டும் டும்' தான்.