காமெடி நடிகர் யோகி பாபு, தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். எனவே, தூக்கம் கூட இல்லாமல் ஒப்புக்கொண்ட படங்களை நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

குறிப்பாக இவர், கதையின் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், யோகி பாபு நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'ஜாம்பி' இந்த படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளதால், தற்போது ஜாம்பி பட ரிலீஸ் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.