ஹிந்தி குறித்த பிரச்சனை தமிழ் நாட்டில் தலைதூக்கிய போது, பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் பலர், எனக்கு 'இந்தி தெரியாது போடா' என்கிற வசனம் இடம் பெற்ற டி- ஷர்ட் அணிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த பிரச்சனை தற்போது மெல்ல மெல்ல தணிந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது  பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம், காமெடி நடிகர் யோகி பாபுவை வைத்து இயக்கியுள்ள ஹாரர் காமெடி படமான ’பேய்மாமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் மக்கள் சமீப காலமாக சந்தித்து வரும், கொரோனா பிரச்சனை குறித்த எழுத்துக்கள் மற்றும் சிலர் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ள புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பா இந்த  போஸ்டரில் எனக்கு இந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என்று குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர். 

இந்த போஸ்டர் இதோ...