yogi babu kolamavu kokila song cross hits
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து, ஒவ்வொரு புது திரைப்படங்கள் வெளியாகும் போதும், எதோ ஒரு வகையில் சாதனை படைத்தது வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களை அடுத்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களும் அவ்வோது இந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.
ஆனால், ஒரு காமெடி நடிகர் அஜித் - விஜய் படங்களுக்கு நிகராக சாதனை படைக்க முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். 
இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகிபாபு நயன்தாராவிடம் தன்னுடைய காதலை தெரிவிக்கும் வகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 'எனக்கு கல்யாண வயசு' பாடலின் சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
அனிருத் இசையில் வெளியான இந்த பாடல். வெளியான போதே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஹிட் அடித்தது. தற்போது இந்த பாடலை 10 நாட்களில் சுமார் 9.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். எப்படியும் இன்று ஒரு கோடி பார்வையாளைகளை இந்த பாடல் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
இதனால் யோகிபாபுவின் லெவல்... எங்கேயோ போய் விட்டது என ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
