தமிழ் சினிமாவில் எப்போது திறமைக்கு தனி மரியாதை உண்டு என்பதை தன்னுடைய எதார்த்தமான காமெடி மூலம் நிரூபித்து வருபவர் நடிகர் யோகிபாபு. எந்த ஒரு காமெடி நடிகரையும் சார்ந்து நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தாமல், தன்னுடைய பாணியிலேயே நடிப்பது தான் இவருடைய பிளஸ் என்று கூறலாம்.

அதே போல் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காமெடியை தாண்டி இவரை கதையின் நாயகனாக நடிக்க வைக்கவும் பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:  முதல் மாதமே மொத்த குடும்ப தலைவிகளையும் டிவி முன் அமரவைத்து சித்தி 2! டி.ஆர்.பி-ல் பக்கா மாஸ் காட்டிய ராதிகா!

ஆனால், ஓய்வில்லாம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வந்த இவர், கடந்த வருடத்தில் இருந்து நாயகனாக நடிக்கும் படத்தில் எண்ணிக்கையை குறைத்து கொண்டு, காமெடி வேடங்களில் அதிக படத்தில் நடித்து வருகிறார்.

ஊரறிய அனைவருக்கும் தெரிவித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்த இவர்,  கடந்த வாரம் 5 ஆம் தேதி திடீர் என பார்கவி என்கிற பெண்ணை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக யாருக்கும் திருமணம் குறித்து தெரிவிக்க முடியவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார் யோகி பாபு.

 

 

இந்நிலையில், யோகி பாபுவின் திருமணமத்திற்கு போக முடியவில்லை என்றால் கூட, அவருடைய ரசிகர்கள் இருவர், யோகி பாபுவின் திருமண புகைப்படத்தை பிரேம் செய்து, அதனை தங்களுடைய அன்பு பரிசாக அவருடைய வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளனர். யோகி பாபுவும் தன்னுடைய மனைவியுடன் அவர்களுடைய பரிசை பெற்று கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: ஒல்லி பெல்லி இடுப்பில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வளைத்து போட்ட இலியானா!

இது குறித்த புகைப்படத்தை யோகி பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.