'ரைட் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான 'தௌலத்'  வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"தமிழ் திரையுலகில் இதுவரை 20'க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்ட 'ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம்' தான் தற்போது "தௌலத்" திரைப்படத்தை தயாரித்துள்ளது. இண்டெர்நேஷனல் தரத்தில் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தபடத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் கணிக்க முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களுடன் மிரட்டலாக இருக்கும் என தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.

அறிமுக நாயகன் நடித்துள்ள இந்தப்படம் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் கதை நகரும்படி இப்படத்தின் படத்தொகுப்பு வேகத்தை கூட்டியுள்ளது. திரைக்கதையின் விறுவிறுபிற்கேற்ப அமைந்துள்ள பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். 

எந்த ஒரு பிரம்மாண்டத்திற்கும் துவக்கம் சிறியதே. அப்படி சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு,  சிறப்பாக வளர்ந்து ஒரு தரமான ஆக்‌ஷன் திரைப்படமாக வந்துள்ளது. யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் வழக்கம் போல் ரசிக்கும்படியாக அமைத்திருக்கும் என நம்பைகையாக கூறுகிறார்கள் படக்குழுவினர்.  

சிறந்த விநியோகஸ்தராக பெயர் பெற்ற 'ரைட் ஆர்ட்ஸ்' நிறுவனம்,  'தௌலத்' திரைப்படத்தின் மூலம் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்கிற அங்கீகாரத்தையும் பெரும் என பெருமையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் முகமது அலி. நவம்பர் மாதம் 27 ஆம் தேதி  இத்திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.